திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்!
நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொளி காட்சி வாயிலாக இன்று (அக்டோபர் 23) நடைபெற உள்ளது.
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
ஆயுத பூஜை!
நவராத்திரி கொண்டாட்டத்தின் 9வது நாளான இன்று நாடு முழுவதும் ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
144 தடை உத்தரவு!
மருது பாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
மின்சார ரயில் சேவை மாற்றம்!
ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு இன்று சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 520வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிரமடையும் தேஜ் புயல்!
அரபிக்கடலில் அதிதீவிர புயலாக உள்ள தேஜ் இன்று மிகத் தீவிர புயலாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரபாஸ் பிறந்தநாள்!
இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸின் 45வது பிறந்தநாள் இன்று.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 22வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கேரட் – தயிர் பச்சடி
INDvsNZ: 20 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா