திமுக கையெழுத்து இயக்கம்!
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞரணி, மருத்துவரணி, மாணவரணி சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று (அக்டோபர் 21) தொடங்க உள்ளது.
திமுக ஐடி விங் கூட்டம்!
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயற்பாட்டாளர்கள் கூட்டம் முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
அமமுக செயல்வீரர்கள் கூட்டம்!
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக அமமுக கோவை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
வாக்குச்சாவடி முகவர் பயிற்சி பட்டறை!
2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு விசிக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
23 ஏக்கரில் காய்கறி சந்தை!
ஓசூர் அருகே 23 ஏக்கரில் காய்கறி சந்தையை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைக்கிறார்.
காவலர் வீரவணக்க தினம்!
பணிக்காலத்தில் உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதியான இன்று காவலர் வீரவணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
ககன்யான் சோதனை ஓட்டம்!
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் 518வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 19வது லீக் போட்டியில் நெதர்லாந்து – இலங்கை மற்றும் 20வது லீக் போட்டியில் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி!
அக்காவுக்கு ஸ்டாலின் மெசேஜ், அவருக்கு மோடி மெசேஜ்: அப்டேட் குமாரு