அதிவேக மெட்ரோ ரயில்!
இந்தியாவின் முதல் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 20) தொடங்கி வைக்கிறார்.
பங்காரு அடிகளார் இறுதிச் சடங்கு!
பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.
இன்று மாலை அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளாரின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செல் ஒலிபரப்பு எச்சரிக்கை!
பேரிடர்களின் போது அவசரக்கால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை இன்று நடைபெற உள்ளது. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ளது.
நாகை – இலங்கை கப்பல் சேவை ரத்து!
கடந்த 14 ஆம் தேதி தொடங்கப்பட்ட நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை இன்றுடன் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. மீண்டும் ஜனவரி மாதம் முதல் கப்பல் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு இன்று மற்றும் நாளை மெட்ரோ ரயில்கள் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்!
ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி இன்று முதல் அக்டோபர் 22 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் 517வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 18வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…