ஐடி சோதனை!
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்று (நவம்பர் 4) வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. top ten news today November 4 2023
ஆரஞ்சு அலர்ட்!
மிக கனமழை பெய்யும் என்பதால் தமிழ்நாட்டிற்கு இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
வாக்காளர் சேர்க்கை முகாம்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தங்களை செய்வதற்காக இன்றும் நாளையும் அனைத்து வாக்குச் சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
’ஹெல்த் வாக்’ சாலை திறப்பு!
நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஹெல்த் வாக் சாலையை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக சென்னை, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தேனி, மதுரை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், கன்னியாகுமரி, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 532வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
’கான்ஜூரிங் கண்ணப்பன்’ டிரெய்லர்!
நடிகர் நாசர், சதீஷ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லரை இன்று காலை 11 மணிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட உள்ளார்.
’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டிரெய்லர்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டிரெய்லர் இன்று சன் டிவி யூடியூப் பக்கத்தில் வெளியாக உள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற உள்ள 35வது லீக் போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. top ten news today November 4 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4 மாவட்டங்களில் இரவு வரை கனமழை நீடிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!
கிச்சன் கீர்த்தனா: அவல் டோனட்ஸ்!