பூடான் அரசர் இந்தியா வருகை!
பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் 8 நாள் அரசு முறைப் பயணமாக இன்று (நவம்பர் 3) இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
டெல்லியில் உணவு கண்காட்சி!
’உலக உணவு இந்தியா 2023′ இரண்டாவது பதிப்பு எனும் மிகப்பெரிய உணவுக் கண்காட்சியை டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார்.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!
நவம்பர் 1 ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,600 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்த நிலையில் இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கூடுகிறது.
கே.எஸ்.அழகிரியை சந்திக்கும் உதயநிதி!
நீட் விலக்கு ரத்து கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை இன்று சந்திக்க உள்ளார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மாநில கற்றல் அடைவு ஆய்வு தேர்வு!
சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாநில கற்றல் அடைவு ஆய்வுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 531வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
’இந்தியன் 2’ அறிமுக வீடியோ!
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ படத்தின் தமிழ் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடுகிறார்.
’லைசன்ஸ்’ படம் ரிலீஸ்!
இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லைசன்ஸ்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 34வது லீக் போட்டியில் நெதர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பிரெட் சீஸ் பைட்ஸ்
கோபாலபுரத்துல மறுபடியும் குத்துச் சண்டையா? அப்டேட் குமாரு