top ten news in tamil today november 27 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

வி.பி.சிங் சிலை திறப்பு! top ten news in Tamil today November 27 2023

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில், தமிழக அரசு சார்பில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் உருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 27) திறந்து வைக்க உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்!

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள் இன்று.

திருப்பதியில் பிரதமர் மோடி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு இன்று திருப்பதியில் அனைத்து விஐபி தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் போராட்டம்!

“சேரி மொழி” என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு மன்னிப்பு கேட்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் இன்று குஷ்பு வீட்டின் முன்பு போராட்டம் நடத்த உள்ளது.

தேர்வு முடிவுகள்!

அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்காக நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

சென்னை மெட்ரோ ரயில்!

அதிகரித்து வரும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இன்று முதல் 9 நிமிட இடைவெளிக்குப் பதிலாக 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாய்கள் கணக்கெடுப்பு!

சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 555வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி! top ten news in Tamil today November 27 2023

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இரண்டு சிலை திறப்புகளும், இந்திய அரசியல் வரலாறும்

பியூட்டி டிப்ஸ்: மனநலனுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் தொடர்புண்டா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *