அமலாக்கத் துறையில் ஆஜராகும் டெல்லி முதல்வர்!
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (நவம்பர் 2) அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகிறார்.
எம்.பி. மஹுவா மொய்த்ரா விசாரணைக்கு ஆஜர்!
நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா இன்று ஆஜராகிறார்.
காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் 55வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் இந்த பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
கருப்புக் கொடி போராட்டம்!
விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிக்கும் வகையில் ஆளுநருக்கு எதிராக மதுரையில் இன்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
கன்னியாகுமரி செல்லும் சட்டமன்ற உறுதிமொழி குழு!
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று செல்லும் சட்டமன்ற உறுதிமொழி குழு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 530வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ,94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
’லேபில்’ 2வது டிரெய்லர்!
நடிகர் ஜெய் நடித்துள்ள லேபில் வெப் சீரிஸின் 2வது டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது.
ஜவான் ஓடிடி ரிலீஸ்!
இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ள 33வது லீக் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: சருமப் பராமரிப்புக்கு உதவும் க்ரீன் டீ… பயன்படுத்துவது எப்படி?
கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் வடை