top ten news in tamil today november 19 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

உலகக் கோப்பை இறுதிப்போட்டி! top ten news in Tamil today November 19 2023

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

கடற்கரையில் கிரிக்கெட் லைவ்!

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ஆர்.எஸ்.எஸ் பேரணி!

தமிழ்நாடு முழுவதும் இன்று 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உலக பாரம்பரிய வார விழா!

உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் இன்று கட்டணமில்லாமல் சுற்றி பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டுத் தினம்!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதியான இன்று தேசிய ஒருமைப்பாட்டுத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 547வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, சிவகங்கை. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விவேக் பிறந்தநாள்!

மறைந்த நடிகர், சின்ன கலைவாணர் விவேக் பிறந்தநாள் இன்று.

நடிகர் அருண் விஜய் பிறந்தநாள்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அருண் விஜய்யின் 46வது பிறந்தநாள் இன்று. top ten news in Tamil today November 19 2023

‘நா ரெடி’ வீடியோ பாடல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடலின் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?

பியூட்டி டிப்ஸ்: கழுத்துக் கருமையில் இருந்து விடுபட எளிய முறைகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *