நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்! top ten news in Tamil today November 11 2023
நாம் தமிழர் கட்சியின் மாநிலம் தழுவிய உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று (நவம்பர் 11) முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சிறப்புப் பேருந்துகள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 3வது நாளாக இன்று சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முன்பதிவில்லா சிறப்பு ரயில்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.
தேசிய கல்வி தினம்!
நாட்டின் முதலாவது கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக இன்று தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 539வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
’காதல் The Core’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!
நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா நடித்துள்ள ’காதல் The Core’ படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
‘ரிபல்’ டீசர்!
நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ரிபல்’ படத்தின் டீசரை இன்று மாலை 5 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிடுகிறார்.
’சைரன்’ டீசர்!
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படத்தின் டீசர் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 43வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – பங்களாதேஷ் மற்றும் 44வது லீக் போட்டியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. top ten news in Tamil today November 11 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன். கீர்த்தனா : டிரை ஃப்ரூட் லட்டு!
வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை சாத்தியமா?… உலக நாடுகளின் வேலை நேரங்களை பாருங்க!