நித்தி ஆயோக் ஆட்சிமன்றக்குழு!
நித்தி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்றக்குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே 27) டெல்லியில் நடைபெற உள்ளது.
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்!
கர்நாடக அமைச்சரவையில் ஏற்கனவே 8 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் இன்று புதிதாக 24 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
நாதக பொதுக்கூட்டம்!
நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் 2,000 பேர் மாற்று கட்சியில் இருந்து இணையும் பொதுக்கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பட்டுக்கோட்டையில் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது.
புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்!
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
கோடை விழா பழக்கண்காட்சி!
நீலகிரி கோடை விழாவில் இரண்டு நாட்கள் நடைபெறும் பழக்கண்காட்சி இன்று தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 371வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
’மாமன்னன்’ 2வது பாடல்!
மாமன்னன் படத்தின் 2வது பாடல் ‘ஜிகுஜிகு ரெயில்’ இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
ஐபிஎல் இறுதிப்போட்டி!
நேற்று இரவு நடைபெற்ற குவாலிஃபயர்-2 சுற்றில் மும்பை அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது குஜராத். நாளை (மே 28) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோத உள்ளன.
மலேசியா மாஸ்டர்ஸ்!
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற உள்ள அரையிறுதி பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரணாய் விளையாட உள்ளனர்.
ஆளுநர் மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது ஏன்? – சேகர்பாபு
சுப்மன் கில் அதிரடி: மும்பையை பறக்க விட்ட குஜராத்
செங்கோலை வழங்கிய போது என்ன நடந்தது? திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம்!