நாடாளுமன்ற திறப்பு விழா வழக்கு விசாரணை!
பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு எதிராகவும் குடியரசுத் தலைவர் கட்டிடத்தை திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (மே 26) விசாரணைக்கு வருகிறது.
ஜப்பான் முதலீட்டாளர்கள் மாநாடு!
சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அந்நாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.
ராகுல் காந்தி – அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!
மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோருவதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இன்று சந்திக்க உள்ளார்.
பள்ளிகள் திறக்கும் தேதி!
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அறிவிக்க உள்ளார்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டக்கணக்கு!
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரியும் 5,45,297 அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள்கள் இன்று வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 370வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
வெப்ப சலனம் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியாகும் திரைப்படங்கள்!
தீராக் காதல், கழுவேத்தி மூர்க்கன், காசேதான் கடவுளடா ஆகிய தமிழ்ப்படங்கள், தமிழில் டப் செய்யப்பட்ட ‘2018’ என்ற மலையாள படம் மற்றும் ‘ஏலியன்ஸ் 2042’ என்ற ஹாலிவுட் படம் ஆகியவை திரையரங்கில் இன்று வெளியாக உள்ளது.
ஐபிஎல் குவாலிஃபயர் – 2!
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான குவாலிஃபயர்-2 சுற்றில் குஜராத் – மும்பை அணிகள் இன்று மோத உள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்!
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற உள்ள காலிறுதி போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரணாய் விளையாட உள்ளனர்.
“ஒரு மாசமா கரண்ட் இல்ல”: இரவில் மக்கள் சாலை மறியல்!
கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு பச்சடி!