17வது வந்தே பாரத் ரயில் சேவை!
உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் – டெல்லி இடையேயான நாட்டின் 17வது வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் மோடி இன்று (மே 25) காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.
ஆளுநர் மாளிகையில் செங்கோல் நிகழ்ச்சி!
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று செங்கோல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.
பொறுப்பு தலைமை நீதிபதி!
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் இன்று முதல் செயல்பட உள்ளார்.
கலை, அறிவியல் கல்லூரி தரவரிசை!
தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாக உள்ளது.
காணாமல் போன குழந்தைகள் தினம்!
உலகளவில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடத்தல் மற்றும் சுரண்டல் ஆகியவற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை ஊக்குவிக்கவும் இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 369வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
வெப்ப சலனம் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் வீடியோ வெளியீடு!
நடிகர் கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் ஜப்பான் படத்தின் அறிமுக வீடியோ (intro video) இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.
கவுண்டமணி பிறந்தநாள்!
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பிறந்தநாள் இன்று.
ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று!
நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை வென்றது மும்பை. தொடர்ந்து நாளை (மே 26) இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் குவாலிஃபயர்-2 சுற்றில் குஜராத் – மும்பை அணிகள் மோத உள்ளன.
மும்பை அணி அசத்தல்: வெளியேறியது லக்னோ
லக்னோவிற்கு 183 ரன்கள் இலக்கு!