டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கர்நாடக காங்கிரஸ் முதல்வர் அறிவிப்பு!
அடுத்த முதல்வர் யார் என்று போட்டி நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே இன்று கர்நாடக முதல்வர் யார் என்பதை பெங்களூருவில் அறிவிக்க உள்ளார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
திருடு போன செல்போனுக்கு இணையத்தளம்!
திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க புதிய இணையத்தளத்தை மத்திய அரசு இன்று அறிமுகம் செய்ய உள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம்!
சிதம்பரத்தில் இன்று மாலை விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
சிறப்பு ரயில் முன்பதிவு!
தாம்பரத்தில் இருந்து ஜோத்பூர் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் துவங்குகிறது.
வாட்ஸ் அப்-ல் மெட்ரோ ரயில் டிக்கெட்!
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்க வாட்ஸ் ஆப் வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 361வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போர் தொழில் ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.
ஐபிஎல் போட்டி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 64வது லீக் போட்டியில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோத உள்ளன.
திருப்பதி: இனி மாதந்தோறும் 24ஆம் தேதி ரூ.300 தரிசனத்துக்கு முன்பதிவு!
கள்ளச்சாராய மரணம்: ஒரே நாளில் குற்றவாளி மீது குண்டாஸ்! என்ன நடந்தது?