பாஜக தேர்தல் அறிக்கை!
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று (மே 1) பாஜக வெளியிட உள்ளது.
பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை!
மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மே தின பூங்காவில் மலரஞ்சலி!
மே 1, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிந்தாரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மலரஞ்சலி செலுத்த உள்ளார்.
தஞ்சை பெருவுடையார் தேரோட்டம்!
தஞ்சை பெருவுடையார் கோவிலில் இன்று சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது.
பெட்ரொல் டீசல் விலை!
சென்னையில் இன்று 345வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 4 மாவட்டங்களில் மிக கனமழையும் 17 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை!
திரைப்பட சங்க தயாரிப்பாளர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது.
’மாமன்னன்’ ஃபர்ஸ்ட் லுக்!
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் ஃபஸ்ர்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளது.
நடிகர் அஜித் பிறந்தநாள்!
நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ’விடாமுயற்சி’ என்ற படத்தின் தலைப்பை இன்று வெளியிட்டுள்ளது லைகா புரோடக்ஷன்ஸ்.
ஐபிஎல் போட்டி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43வது லீக் போட்டியில் லக்னோ – பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
கிச்சன் கீர்த்தனா: கேரள பலாப்பழ அல்வா
என் அண்ணனிடம் கற்றுக்கொள்ளுங்கள்: பிரதமருக்கு பிரியங்கா காந்தி அட்வைஸ்!