தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் திட்டம்!
தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் திட்டத்தை சென்னையை அடுத்த ஒரகடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 8) தொடங்கி வைக்கிறார்.
அதிமுக வழக்கு!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
குறுவை சாகுபடி முன்னேற்பாடு ஆலோசனை!
குறுவை சாகுபடி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள் தஞ்சையில் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
திருச்சியில் ட்ரோன் பறக்கத் தடை!
நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி செல்ல உள்ளதால் இன்று மற்றும் நாளை ட்ரோன் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
உலக பெருங்கடல் தினம்!
கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களைப் பாதுகாக்க இன்று உலக பெருங்கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
குருபூஜை விழா!
சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீபாம்பன் சுவாமிகள் கோவில் குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 383வது நாளாக விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நேற்று முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா அணி இன்று இரண்டாவது நாளாக பேட்டிங் செய்ய உள்ளது.
பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்!
பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்! தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.