கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்!
ஒடிசா ரயில் விபத்து காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பில் இன்று (ஜூன் 7) நடைபெறுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் – அகிலேஷ் யாதவ் சந்திப்பு!
மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளைச் சந்தித்து ஆதரவு கோரி வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை உத்தரப் பிரதேசத்தில் இன்று சந்திக்க உள்ளார்.
மெட்ரோ பார்கிங் கட்டணம்!
சென்னை மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்த கட்டணத்தில் இன்று முதல் கட்டண தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்!
பிளஸ் 1 மாணவர்கள் பொதுத்தேர்வு விடைத்தாள் நகலினை இன்று முதல் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஐடிஐ-ல் விண்ணப்பிக்க கடைசி தேதி!
அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) சேருவதற்கு விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் 382வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-41 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பில் இருந்து 2-4 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எல்.ஜி.எம் டீசர் வெளியீடு!
தோனி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா நடித்துள்ள எல்.ஜி.எம். (Lets Get Married) படத்தின் டீசரை இன்று இரவு 7 மணிக்கு தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனி இணைந்து வெளியிட உள்ளனர்.
‘பொம்மை’ ஆல்பம் ரிலீஸ்!
எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள பொம்மை படத்தின் பாடல் ஆல்பம் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் பக்கோடா
‘எல்.ஜி.எம்’ திரைப்படத்தின் டீசரை வெளியிடும் தோனி