தலைமைச் செயலாளர், டிஜிபி பதவியேற்பு!
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா மற்றும் டிஜிபியாக சங்கர் ஜிவால் இன்று பதவியேற்க உள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழா!
டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 30) கலந்து கொள்கிறார்.
பாஜக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்!
ஈரோடு மாவட்டத்தில் இன்று நடைபெறும் பாஜகவின் 9 ஆண்டுக்கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார்.
டாஸ்மாக் கடைகள் மூடல்!
1997ல் மேலூரின் மேலவளவு கிராமத்தில் அப்போதைய ஊராட்சி தலைவர் முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 26வது நினைவு தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பதித்ரோற்சவம் தொடக்கம்!
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் இன்று தொடங்குகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 405வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கபடி ப்ரோ ரிலீஸ்
சதீஷ் ஜெயராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கபடி ப்ரோ’ திரைப்படம் இன்று வெளியாகிறது.
கேப்டன் மில்லர் ஃப்ர்ஸ்ட் லுக்!
நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.
ஆசியக் கபடி சாம்பியன்ஷிப்!
இன்று நடைபெற உள்ள ஆசியக் கபடி சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – இரான் அணிகள் மோத உள்ளன.
தேசிய புள்ளியியல் தினமும் புள்ளியியலின் முக்கியத்துவமும்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!