செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவிரி மருத்துவமனையில் இன்று (ஜூன் 21) காலை பைபாஸ் சர்ஜரி தொடங்கியது.
அமலாக்கத்துறை மேல்முறையீடு!
செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக ஆர்ப்பாட்டம்!
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
யோகா நிகழ்ச்சியில் பிரதமர்!
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி ஐ.நா. சபை தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்கிறார்.
அண்ணாமலை வெளிநாடு பயணம்!
ஆறு நாள் பயணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு லண்டன் செல்கிறார்.
மழைக்கு வாய்ப்பு!
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
396வது நாளாக மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மறு கூட்டல் முடிவு!
தமிழகத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மறு கூட்டல் முடிவு இன்று வெளியிடப்பட உள்ளது.
வள்ளலார் ஜெயந்தி விழாவில் ஆளுநர்!
வடலுாரில் இன்று நடைபெறும் வள்ளலார் ஜெயந்தி விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்கிறார்.
ஆருத்ரா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் ரூ.2,438 கோடி மோசடி வழக்கில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.
“திருவாரூரில் இருந்தே முதல்வர் எங்களை இயக்குகிறார்”- அமைச்சர் சேகர் பாபு