அமித்ஷா தமிழகம் வருகை!
பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூன் 10) இரவு சென்னை வருகிறார்.
மாநில திட்டக்குழு கூட்டம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் சென்னை எழிலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
திமுக செயல்வீரர்கள் கூட்டம்!
முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் முன்னிலையில் சேலத்தில் இன்று செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு!
கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை கருத்தில் கொண்டும் வார இறுதி நாட்கள் என்பதால் இன்றும் நாளையும் கூடுதலாக 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!
வேளாண் விளைநிலங்களை அழித்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
குறைதீர் முகாம்!
சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் 385வது நாளாக இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 – 41 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பில் இருந்து 2 – 4 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 3வது நாளில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. டெஸ்ட் இறுதிப்போட்டியில் 296 ரன்கள் முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலியா இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடர உள்ளது.
புரோ ஹாக்கி லீக்!
புரோ ஹாக்கி லீக் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து – இந்தியா அணிகள் மோத உள்ளன.
கிச்சன் கீர்த்தனா: வெஜ் நக்கட்ஸ்
WTC Final: ஆஸ்திரேலியா 173 ரன்கள் முன்னிலை!
