என்.எல்.சி-க்கு எதிராக போராட்டம்!
விளைநிலங்களை அழித்து கால்வாய் அமைத்து வரும் என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் தலைமையில் இன்று (ஜூலை 31) புவனகிரி சட்டமன்ற அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்தியா கூட்டணி ஆலோசனை!
நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய கேள்வி குறித்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர்.
உத்தவ் தாக்கரே மனு விசாரணை!
சிவசேனா சின்னம் மற்றும் பெயர் ஒதுக்கீட்டுக்கு எதிராக உத்தவ் தாக்கரே அணி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
வருமான வரி தாக்கல்!
2022-23 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதுவரை 6 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி!
காட்டுத் தீ காரணமாக சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மார்க்ஷீட்!
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் 436வது நாளாக இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேட்டையன் போஸ்டர் வெளியீடு!
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தின் வேட்டையன் கதாபாத்திரத்தின் போஸ்டர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது
ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை!
ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று ஜப்பான் – ஸ்பெயின், அயர்லாந்து – நைஜிரீயா அணிகள் மோத உள்ளன.
மணிப்பூர் வன்முறையும், மக்களாட்சி விழுமியங்களும்
கிச்சன் கீர்த்தனா: ராகி சேமியா கிச்சடி