அண்ணாமலை பாதயாத்திரை!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை ராமேஸ்வரத்தில் இன்று (ஜூலை 28) மாலை தொடங்க உள்ளது. இந்த பாதயாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.
என்.எல்.சி முற்றுகை போராட்டம் !
விவசாய நிலங்களை என்.எல்.சி நிர்வாகம் அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
என்.எல்.சி கால்வாய் பணிகள் நிறுத்தம்!
விவசாய நிலங்களை அழித்து கால்வாய் அமைத்து வரும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்.எல்.சி நிர்வாகம்.
பொறியியல் கலந்தாய்வு!
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையத்தளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்!
பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியாக உள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் 433வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேப்டன் மில்லர் டீசர்!
நடிகர் தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழா!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது.
எல்.ஜி.எம். ரிலீஸ்!
கிரிக்கெட் வீரர் தோனி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள எல்.ஜி.எம். (Lets Get Married) திரைப்படம் இன்று வெளியாகிறது.
கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை பிரட்டல் (ஆடி ஸ்பெஷல்)
அண்ணாமலை பாதயாத்திரை: அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு!