டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil today july 27 2023

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை!

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 2வது நாளாக இன்றும் நடைபெற உள்ளது.

அமலாக்கத் துறை இயக்குநர் பதவி நீட்டிப்பு வழக்கு!

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்க கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

கருப்பு உடையில் எதிர்க்கட்சிகள்!

மணிப்பூர் விவகாரத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதத்தை தொடங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடாளுமன்ற அலுவல்களில் எதிர்க்கட்சிகள் கருப்பு உடை அணிந்து பங்கேற்க உள்ளன.

வேளாண் கண்காட்சியில் முதல்வர்

திருச்சி கேர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற உள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

அப்துல் கலாம் நினைவுநாள்!

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு நாள் இன்று.

விண்ணில் பாய்கிறது மிகப்பெரிய செயற்கை கோள்!

உலகின் மிகப்பெரிய செயற்கைகோளை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்த உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் 432வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓடிடியில் வெளியாகிறது மாமன்னன்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்!

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று தொடங்கி நடைபெற உள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகுக் கூழ் (ஆடி ஸ்பெஷல்)

என்.எல்.சி. டென்ஷன்… இரவுப் பேருந்துகளுக்கு திடீர் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment