திருச்சியில் ஸ்டாலின்
திருச்சியில் இன்று (ஜூலை 26) திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு!
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
திமுக சொத்துபட்டியல் பாகம் – 2!
திமுக சொத்து பட்டியல் பாகம் 2-ஐ (DMK files) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிடுகிறார்.
ஜி20 சுற்றுச்சூழல் பணிக்குழு கூட்டம்!
ஜி20 மாநாட்டின் 4வது சுற்றுச்சூழல் பணிக்குழு கூட்டம் இன்று சென்னையில் தொடங்க உள்ளது.
ரணில் விக்ரமசிங்கே ஆலோசனை!
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
முஸ்லீம் ஒருங்கிணைப்பு குழு கருத்தரங்கு!
கேரளாவில் இன்று நடைபெற உள்ள முஸ்லீம் ஒருங்கிணைப்பு குழு கருத்தரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளார்.
தரவரிசை பட்டியல்!
கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.
வானிலை அப்டேட்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 431வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜெயிலர் 3வது சிங்கிள்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் 3வது சிங்கிள் ‘ஜுஜுபி’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
கிச்சன் கீர்த்தனா: துள்ளு மாவு (ஆடி ஸ்பெஷல்)
ரூபாய்மைய வர்த்தகத்தின் முக்கியத்துவம் என்ன? பகுதி 14