டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

திமுக எம்.பிக்கள் கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பது தொடர்பாக இன்று (ஜூலை 14) திமுக எம்.பிக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் ஆலோசனை!

அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சந்திரயான் 3!

சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

தஞ்சை புத்தகத் திருவிழா!

தஞ்சாவூரில் புத்தக திருவிழா இன்று தொடங்கி ஜூலை 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தக்காளி, பருப்பு விற்பனை!

சென்னையில் உள்ள அமுதம் அங்காடியில் இன்று முதல் கொள்முதல் விலைக்கு தக்காளி மற்றும் பருப்பு விற்பனை செய்யப்பட உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் 419வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

’மாவீரன்’ ரிலீஸ்!

நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள மாவீரன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

’தில்லுக்கு துட்டு ரிட்டன்ஸ்’ டிரெய்லர்!

நடிகர் சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு ரிட்டன்ஸ் படத்தின் டிரெய்லர் இன்று காலை 10.05 மணிக்கு வெளியாக உள்ளது.

டெஸ்ட் போட்டி!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸிற்கு களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து இன்று 3வது நாள் ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.

கொட்டும் கனமழை: 700ஐ தாண்டிய ரத்து செய்யப்பட்ட ரயில்கள்!  

சர்வதேச நாணய நிதியத்திடம் 3 பில்லியன் டாலர்கள் கடன் பெறும் பாகிஸ்தான்! 

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *