தென்காசி தொகுதி வாக்கு எண்ணிக்கை!
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று (ஜூலை 13) மீண்டும் எண்ணப்பட உள்ளது.
பிரதமர் பிரான்ஸ் பயணம்!
பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உள்ளார்.
சந்திராயன் – 3 கவுன்ட்டவுன்!
நாளை விண்ணில் பாயவுள்ள சந்திராயன் – 3 விண்கலத்தின் கவுன்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்குத் தொடங்க உள்ளது.
ஆடிப்பூரம் திருவிழா தொடக்கம்!
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவில் ஆடிப்பூரம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. ஜூலை 22 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி சிறப்பு ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்க உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 418வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜெய்லர் 2வது சிங்கிள்!
நெல்சன் தீலிப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் 2வது பாடலுக்கான அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
’தில்லுக்கு துட்டு ரிட்டன்ஸ்’ ரீலிஸ் தேதி!
சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு ரிட்டன்ஸ் படத்தின் ரீலிஸ் தேதி இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்கிஸிற்கு பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட் இழக்காமல் 80 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து இன்று 2வது நாள் ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.
கிச்சன் கீர்த்தனா: ஆலு ஸ்டஃப்டு சப்பாத்தி
TNPL:கோவை அதிரடி..நெல்லை அணிக்கு 206 ரன்கள் இலக்கு!