செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை!
செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று (ஜூலை 12) 2வது நாளாக தொடர்ந்து நடைபெற உள்ளது. அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜனரல் துஷார் மேத்தா வாதங்களை முன் வைக்க உள்ளார்.
வெளியுறவுத் துறை இணையமைச்சர் சிரியா பயணம்!
வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் 2 நாள் பயணமாக இன்று சிரியா செல்கிறார்.
எம்பிபிஎஸ் பிடிஎஸ் விண்ணப்பம்!
எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
சிறப்பு ரயில் முன்பதிவு!
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை!
தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 300 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 417வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விஜய் சேதுபதி படம் அப்டேட்!
குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர் நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
டெஸ்ட் போட்டி தொடக்கம்!
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று டொமினிகாவில் தொடங்குகிறது.
டிஎன்பிஎல் இறுதிப்போட்டி!
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கோவை – நெல்லை அணிகள் மோத உள்ளன.
கிச்சன் கீர்த்தனா: கொத்தமல்லி பணியாரம்
மக்கள் நலனா? டாஸ்மாக் வருவாயா?