அரிவாள் செல் ரத்தசோகை!
அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தில் இன்று (ஜூலை 1) துவங்கி வைக்கிறார்.
திராவிடர் விடுதலைக் கழகம் கருத்தரங்கம்!
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னை அண்ணா சாலையில் இன்று நடைபெறுகிறது.
பாஜக பொதுக்கூட்டம்!
கரூர் மாவட்டம் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது.
சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி!
சதுரகிரி மலைக் கோவிலில் பக்தர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமர்நாத் குகை கோவில்!
அமர்நாத் குகை கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் 406வது நாளாக இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
’பாட்னர்’ பட அறிவிப்பு!
நடிகர் ஆதி, ஹான்சிகா, யோகி பாபு நடித்துள்ள பாட்னர் படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
முதலமைச்சர் கோப்பை!
முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் துவங்குகிறது.
டிஎன்பிஎல் கிரிக்கெட்!
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 22வது லீக் போட்டியில் திருப்பூர் – சேலம் மற்றும் 23வது லீக் போட்டியில் நெல்லை – திண்டுக்கல் அணிகள் மோத உள்ளன.
கிச்சன் கீர்த்தனா: கொள்ளு – பார்லி கஞ்சி
எனது அமைச்சர்களை நீங்கள் நீக்குவதா?: ஆளுநருக்கு முதல்வர் கடிதம்!