திருவள்ளுவர் சிலை திறப்பு! top ten news in Tamil today January 5 2024
கோவை குறிச்சிகுளத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 5) திறந்து வைக்க உள்ளார்.
முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கு!
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஏற்கனவே வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
கொடநாடு வழக்கு விசாரணை!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
சிறு வணிக கடன் திட்ட முகாம்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம் இன்று தொடங்குகிறது.
கனிமொழி எம்.பி பிறந்தநாள்!
திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழியின் 56வது பிறந்தநாள் இன்று.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 594வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அயலான் டிரெய்லர் ரிலீஸ்!
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது.
‘அச்சம் என்பது இல்லையே’ டிரெய்லர்!
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘Mission chapter 1- அச்சம் என்பது இல்லையே’ டிரெய்லர் இன்று வெளியாகிறது.
மகளிர் டி20!
இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நவி மும்பையில் இன்று தொடங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: ஹேர் கலர்… ப்ளீஸ் கேர்!
கிச்சன் கீர்த்தனா: கார பிஸ்கட்!
top ten news in Tamil today January 5 2024