அனைத்துக் கட்சி கூட்டம்! top ten news in Tamil today January 30 2024
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தொடர் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இன்று (ஜனவரி 30) நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
பாமக ஆலோசனை!
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற உள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமின் மனு விசாரணை!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக தாக்கல் செய்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
நெல்லை மாநகராட்சி கூட்டம்!
நெல்லை மாநகராட்சி அவசர கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் டிஎன்எஸ்டிசி பேருந்துகள்!
செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டம்!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.
தியாகிகள் தினம்!
இந்திய விடுதலைக்காக உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகாத்மா காந்தி நினைவு தினமான இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 619வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘ரோமியோ’ ஃபர்ஸ்ட் லுக்!
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மதியம் 12.01 மணிக்கு வெளியாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: பருவ வயதில் பருத்தொல்லை… தடுப்பது எப்படி?
கிச்சன் கீர்த்தனா: மட்டன் கீமா பாஸ்தா!
top ten news in Tamil today January 30 2024