ராகுல் காந்தி நீதி பயணம்!
மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத ஒற்றுமை நீதி பயணத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று (ஜனவரி 14) தொடங்குகிறார்.
போகிப் பண்டிகை!
பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழாவில் பிரதமர் மோடி!
டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
யானைமலை மாரத்தான்!
‘பூமியைக் காப்போம்’ என்ற கருத்தை வலியுறுத்தி நடைபெறும் 14வது யானைமலை மாரத்தானை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
முன்னாள் வீரர்கள் தினம்!
முன்னாள் ராணுவ வீரர்களின் தன்னலமற்ற கடமை உணர்வு, தேசத்திற்கான அவர்களது தியாகம் ஆகியவற்றின் அடையாளமாக ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 603வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
பிக் பாஸ் இறுதிப்போட்டி!
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.
டி20 போட்டி!
இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் 2வது டி20 போட்டி இன்று மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன்!
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்னில் இன்று தொடங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11
சண்டே ஸ்பெஷல்: டிரெண்ட் ஆகும் `புத்தா பௌல்’ டயட் – எல்லாருக்கும் ஏற்றதா?