top ten news in tamil today january 13 2024

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்! top ten news in Tamil today January 13 2024

இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக இன்று (ஜனவரி 13) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித்ஷாவை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள்!

தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணத்தை உடனடியாக தர வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு எம்.பிக்கள் குழு இன்று மாலை 3.30 மணியளவில் சந்திக்க உள்ளது.

பெரியார், அம்பேத்கர் விருதுகள்!

2023 ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்க உள்ளார்.

பொதுக்குழுக் கூட்டம்!

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற உள்ளது.

சென்னை சங்கமம்!

சென்னை தீவுத்திடலில் ’சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ வை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.

பொங்கல் பரிசு!

பொங்கல் பரிசுக்காக டோக்கன் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்றும் நாளையும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

சிறப்புப் பேருந்துகள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக இன்று 2வது நாளாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வந்தே பாரத் சிறப்பு ரயில்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இன்றும் நாளையும் இயக்கப்பட உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 602வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: காளான் பிரியாணி!

அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்: அரசாணை வெளியானது!

top ten news in Tamil today January 13 2024

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *