விஜயகாந்த் இறுதிச் சடங்கு! top ten news in Tamil today December 29 2023
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 29) மாலை 4.45 மணிக்கு விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மத்திய அரசு மரியாதை!
விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு சார்பில் இன்று அஞ்சலி செலுத்த உள்ளார்.
விசிக ஆர்ப்பாட்டம் ரத்து!
தேர்தலில் மின்னணு இயந்திரத்திற்குப் பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறையை வலியுறுத்தி இன்று நடைபெறவிருந்த விசிக ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
துணைவேந்தர் ஜெகநாதன் வழக்கு!
பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சேலம் போலீசார் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
படப்பிடிப்புகள் ரத்து!
விஜயகாந்த் மறைவையொட்டி இன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
வெள்ள நிவாரண நிதி விநியோகம்!
கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண நிதி விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 586வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிலீஸாகும் திரைப்படங்கள்!
‘நந்திவர்மன்’, ’மதிமாறன்’, இசைஞானி இளையராஜா இசையில் ’வட்டார வழக்கு’ ஆகிய தமிழ் திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
டி20 போட்டி!
நியூசிலாந்து – பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: குளிர்காலத்தில் முகச்சுருக்கத்தைச் சரிசெய்ய…
கிச்சன் கீர்த்தனா: வேர்க்கடலை சாட்!
top ten news in Tamil today December 29 2023