மக்களுடன் முதல்வர் திட்டம்! top ten news in Tamil today December 18 2023
பொதுமக்களின் கோரிக்கைகளை மக்களிடமே சென்று நிறைவேற்றும் திட்டமான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் இன்று (டிசம்பர் 18) தொடங்கி வைக்கிறார்.
அதிமுக கிறிஸ்துமஸ் விழா!
சென்னை வானகரம் ஜீசஸ்கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
தருமபுரியில் பாமக போராட்டம்!
தருமபுரியில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
ஆருத்ரா தரிசன விழா!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கோவையில் ஆளுநர்!
கோவை, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
தேர்வுகள் ஒத்திவைப்பு!
தென்மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வுகளும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 576வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழையும், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
லால் சலாம் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தின் முதல் பாடலான ‘தேர் திருவிழா’ இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்றத்தில் வெளிப்படும் நாட்டு மக்கள் சீற்றம்!
ஜப்பானுக்கு ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா: என்ன காரணம்?
top ten news in Tamil today December 18 2023