டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil today december 12 2023

top ten news in Tamil today December 12 2023

மழை பாதிப்பை ஆய்வு செய்யும் மத்தியக் குழு!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பினை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்தியமூர்த்தி தலைமையிலான மத்தியக் குழு இன்று (டிசம்பர் 12) ஆய்வு செய்ய உள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை!

மழை வெள்ளத்தின் போது சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

சான்றிதழ் பெற சிறப்பு முகாம்!

சென்னையில் வெள்ளத்தின் போது சேதமான பள்ளி, கல்லூரி மற்றும் அரசு சான்றிதழ்களை கட்டணமின்றி பெறுவதற்கு இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கு புத்தகம் விநியோகம்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழையில் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு இன்று முதல் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

போலீசில் ஆஜராகிறார் ஆர்.கே.சுரேஷ்

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் காவல்துறை விசாரணைக்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் இன்று ஆஜராகிறார்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 570வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘தலைவர் 170’ டீசர் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவர் 170’ படத்தின் தலைப்பு மற்றும் பிறந்தநாள் டீசர் விடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

‘ஸ்டார்’ திரைப்பட பாடல் ரிலீஸ்!

நடிகர் கவின் நடிக்கும் ஸ்டார் திரைப்படத்தின் ’காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ்’ (college superstars) பாடல் இன்று மதியம் 12.12 மணிக்கு வெளியாக உள்ளது.

2வது டி20 போட்டி!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ரிச் வடை!

டிஜிட்டல் திண்ணை: தமிழ்நாட்டில் கவனம் குவிக்கும் மோடி… பாஜக கரை வேட்டி கட்டும் பன்னீர்?

top ten news in Tamil today December 12 2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel