டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
வீடு தேடி வரும் அரசு சேவைகள் திட்டம்! top ten news in Tamil today December 10 2023
பஞ்சாப் மாநிலத்தில் 43 வகையான அரசு சேவைகள் வீடு தேடி வரும் திட்டத்தை அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தலைமையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (டிசம்பர் 10) தொடங்கி வைக்க உள்ளார்.
பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!
சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றத்தை அடுத்து இன்று அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
காவல்துறை தேர்வு!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் 3,359 காலிப் பணியிடங்களை நிரப்பிட இரண்டாம் நிலை காவலர் நேரடி எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது.
சர்வதேச விலங்கு உரிமைகள் தினம்!
விலங்குகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதியான இன்று சர்வதேச விலங்கு உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 568வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று பிற்பகல் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்!
அரபிக்கடல் பகுதியில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடிகர் சிவா பிறந்தநாள்!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
முதல் டி20 போட்டி!
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி இன்று முதல் டி20 போட்டியில் விளையாட உள்ளது.
கேலோ இந்தியா போட்டிகள்!
கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் இன்று தொடங்க உள்ளது. டிசம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 1,350-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: ‘எவர்கிரீன் இளமை’ சாத்தியமா?
சண்டே ஸ்பெஷல்: நீரிழிவாளர்களுக்கு பச்சரிசிக்கு பதில் புழுங்கலரிசிதான் நல்லதா?
top ten news in Tamil today December 10 2023