மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஏப்ரல் 29) சந்திக்க உள்ளார்.
கலைமாமணி விழா!
புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கலைமாமணி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் 216 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
உதயநிதி ஸ்டாலின் ஈரோடு பயணம்!
ஈரோடு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை வெற்றி பெற செய்த வேட்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு செல்கிறார்.
கோடை விடுமுறை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.
மருத்துவம், உணவுத் துறை ஆலோசனைக் கூட்டம்!
மக்கள் நல்வாழ்வுத் துறை, சுகாதாரத் துறை மாவட்ட அலுவலர்கள் மற்றும் உணவுத் துறை மாவட்ட அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று 2வது நாளாக நடைபெறுகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 343வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழையும், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிச்சைக்காரன் – 2 டிரெய்லர்!
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் 2 படத்தின் டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.
அனுஷ்கா பட டீசர்!
நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது.
ஐபிஎல் 2023!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள 39வது லீக் போட்டியில் கொல்கத்தா – குஜராத் மற்றும் 40வது லீக் போட்டியில் டெல்லி – ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.
கிச்சன் கீர்த்தனா: சுண்டைக்காய் வற்றல்
விலையில்லா விருந்தகம்: ரசிகர்களை பாராட்டிய விஜய்