குடியரசுத் தலைவரை சந்திக்கும் முதல்வர்
டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு இன்று அழைப்பு விடுக்க உள்ளார்.
மநீம ஆலோசனைக் கூட்டம்!
கோவையில் மக்கள் நீதி மய்யம் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோவை மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகளுடன் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை திருவிழா!
சென்னை தீவுத்திடலில், “சென்னை திருவிழா 2023, சர்வதேச கைத்தறி கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு திருவிழா” இன்று தொடங்குகிறது.
புகையிலை தடை ஆலோசனை!
குட்கா, பான்மசாலா, புகையிலைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மீறுபவர்கள் மீது சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 342வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விடுதலை ஓடிடி ரிலீஸ்!
நடிகர் சூரி நடிப்பில் வெளியான விடுதலை பாகம் 1 இன்று ‘ZEE 5’ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்!
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
சமந்தாவிற்கு கோவில் திறப்பு விழா!
ஆந்திராவில் உள்ள ரசிகர் ஒருவர் அவரது வீட்டில் நடிகை சமந்தாவிற்கு கோவில் கட்டியுள்ளார். சமந்தாவின் பிறந்தநாளான இன்று கோவிலின் திறப்பு விழா நடைபெற உள்ளது.
ஐபிஎல் போட்டி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள 38வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன.
கிச்சன் கீர்த்தனா: மோர் மிளகாய்!
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்: தமிழகத்தை பின்பற்றும் ராகுல்