டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news in tamil

கள ஆய்வில் முதல்வர்

கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று (ஏப்ரல் 27) விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.

முதல்வர் டெல்லி பயணம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நாளை சந்திக்க உள்ளார்.

பிரதாப் சிங் பாதல் உடல் தகனம்!

வயது மூப்பு காரணமாக உயிரிழந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரதாப் சிங் பாதல் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

சூடான் தமிழர்கள் வருகை!

சூடானில் இருந்து நேற்று இந்தியா வந்த 360 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர். அதில் 9 தமிழர்கள் இன்று தமிழகத்திற்கு வர உள்ளனர்.

பழனி ரோப் கார் சேவை!

பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை இன்று மீண்டும் தொடங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 341வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மார்க் ஆண்டனி டீசர்!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளது.

ஐபிஎல் டிக்கெட் விற்பனை!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ள சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று நடைபெறுகிறது.

ஐபிஎல் 2023!

ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெற உள்ள ஐபிஎல் 37வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதவிருக்கின்றன.

கிச்சன் கீர்த்தனா: மணத்தக்காளி வற்றல்!

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel