பிரதமர் நிறைவுரை!
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று (ஏப்ரல் 26) பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றுகிறார்.
டெல்லி மேயர் தேர்தல்!
டெல்லி மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
கள ஆய்வில் முதல்வர்
கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்கிறார்.
ஈபிஎஸ் டெல்லி பயணம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல உள்ளார்.
பேருந்துகள் சிறைபிடிக்கும் போராட்டம்!
சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் கேரள பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் இன்று நடைபெற உள்ளது.
சிறப்பு ரயில் முன்பதிவு!
தாம்பரம் – கன்னியாகுமரி இடையில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி இயக்க உள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஐபிஎல் போட்டி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 36வது லீக் போட்டியில் பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதவிருக்கின்றன.
பயணிகள் கவனத்துக்கு… ரயில்வே புதிய விதிமுறைகள்!
“சிஏஜி அறிக்கையில் அதிமுகவின் ஊழல் அம்பலம்”: மா.சுப்பிரமணியன்