விநாயகர் சதுர்த்தி!
முழுமுதற் கடவுளான பிள்ளையார் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி இன்று (செப்டம்பர் 7) கொண்டாடப்படுகிறது.
அயலக தமிழர்களுடன் ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று சிகாகோவில் அயலக தமிழர்கள் மத்தியில் உரையாடுகிறார்.
போலீசார் பாதுகாப்பு!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. சென்னையில் 1500 விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 64 ஆயிரம் போலீசாரும் சென்னையில் 16,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழை நிலவரம்!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் வரும் 10ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வேளாங்கண்ணி தேர் திருவிழா!
வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடைபெறுகிறது.
பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிக்கு தடை!
அரசு பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை வரும் மகாவிஷ்ணு
அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று பிற்பகல் சென்னைக்கு வருகிறார்.
மம்மூட்டி பிறந்தநாள்!
மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி இன்று தனது 73 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் தொடர்ந்து 174ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காங்கிரஸில் வினேஷ் போகத்
இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக போராடிய இருவரும் காங்கிரஸில் இணைந்திருப்பது இந்தியா முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது. இதில் வினேஷ் போகத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பாலடைக் கொழுக்கட்டை!
டிஜிட்டல் திண்ணை: அரசுப் பள்ளிகளில் ‘மகா விஷ்ணு’க்கள்… அன்பில் மகேஷ் இலாகா மாற்றமா?
கோட் பட முதல் நாள் வசூல்: விஜய் ரசிகர்கள் ஷாக்!
ரயில்வே பதவி ராஜினாமா… காங்கிரஸ் கட்சியில் வினேஷ் போகத்
தலைமை ஆசிரியர் மாற்றம்: ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!