டாப் 10 செய்திகள் : மோடி புரூனை பயணம் முதல் தமிழகத்தில் மழை வரை!

அரசியல்

டெங்கு தடுப்பு பணி!

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் இன்று (செப்டம்பர் 3) முதல் அனைத்து மாவட்டங்களிலும் 11 துறைகளைச் சேர்ந்தவர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மோடி புரூனை செல்கிறார்!

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று புரூனை புறப்படுகிறார். இந்தப் பயணம் இந்தியாவுக்கும் புரூனை தருஸ்ஸலாமுக்கும் இடையிலான அரசுசார் உறவுகள் துவங்கி 40 ஆண்டுகளை குறிக்கும் வகையில் அமையவுள்ளது..

தமிழகத்தில் மழை!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் ஆங்காங்கே விட்டுவிட்டு லேசான மழை பெய்து வருகிறது.

ஆர்.ஜி.கர் மருத்துவமனை முதல்வர் கைது!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டார்.  இந்நிலையில் அக்கல்லூரி முதல்வர் சந்திப் கோஷை சிபிஐ கைது செய்துள்ளது. முதல்வராக இருந்தபோது நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாராலிம்பிக் போட்டி!

பாராலிம்பிக் போட்டியில் இன்று பெண்களுக்கான 50மீ ரைபிள், குண்டு எறிதல், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 179வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகியது.

சத்குரு பிறந்தநாள்!

ஈஷா யோக நிறுவனர் சத்குரு இன்று தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

முகேஷ் முன்ஜாமீன் மனு விசாரணை!
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், முன்ஜாமீன் கோரி நடிகர்கள் முகேஷ், சித்திக் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை கேரள உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.

தமிழக வீராங்கனைகள் அசத்தல்!
பாராலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் பிரிவில், தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளி பதக்கமும், மற்றொரு போட்டியில் வீராங்கனை மனீஷா ராமதாஸ் வெண்கலம் பதக்கமும் வென்று அசத்தினர்.

ஆளுநருக்கு அமைச்சர்கள் பதிலடி!
மாநில அரசின் பாடத்திட்டம் குறித்த ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர். அமைச்சர் பொன்முடி, கல்வித் துறையில் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று கூறியுள்ளார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை காட்டிலும் மாநில பாடத்திட்டம் சிறப்பாக இருக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: உடல்வலிக்கு ஒத்தடம் கொடுக்கலாமா?

தெலங்கானா, ஆந்திராவில் வெள்ளம்: படகில் ஆய்வு செய்த சந்திரபாபு நாயுடு

மாநில பாடத்திட்டம் சிறப்பாக இல்லையா?: ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் சாதனை படைத்த தமிழக வீராங்கனைகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *