டாப் 10 செய்திகள் : திமுக பவள விழா முதல் 19 மாவட்டங்களில் மழை வரை!

அரசியல்

திமுக பவள விழா!

திமுக பவள விழா பொதுக் கூட்டம் காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் இன்று நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்!

காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா நடைபெறுவதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ளதால் இன்று பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

19 மாவட்டங்களில் மழை

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (செப்டம்பர் 28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு அடிக்கல்!

நெமிலி வட்டம், பனப்பாக்கம் புதிய சிப்காட் தொழிற்பேட்டையில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை கட்டுமானப் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். 470 ஏக்கர் பரப்பளவில் ரூ.9,000 கோடியில் இந்த தொழிற்பேட்டை அமையவுள்ளது.

உலக ரேபீஸ் தினம்!

ஆண்டுதோறும் செப்டம்பர் 28ஆம் தேதி உலக ரேபீஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி உலக ரேபீஸ் தினத்தை முன்னிட்டு இன்று கால்நடைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

ரயில்கள் ரத்து மற்றும் மாற்றம்!

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் – திருப்பதி விரைவு ரயில் இன்று பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று கடற்கரையிலிருந்து திருத்தணி, ஆவடி வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் கடற்கரைக்கு பதிலாக வியாசர்பாடி ஜீவாவிலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

காலாண்டு தேர்வு விடுமுறை!
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை இன்று தொடங்குகிறது. அக்டோபர் 6ஆம் தேதி வரை 9  நாட்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

முதல்வரைச் சந்தித்த செந்தில் பாலாஜி
சிறையில் இருந்து நேற்று முன்தினம் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஆசிபெற்றார். இந்நிலையில் இன்று நடைபெறும் திமுக பவளவிழாவில் செந்தில் பாலாஜி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 195-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பகத்சிங்கின் பிறந்தநாள்!
சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூரில் பகத்சிங் பிறந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு கீரை அடை!

அது கதை இல்லயாம் நெசமாம் : அப்டேட் குமாரு

ஏடிஎம்-ஐ உடைத்து ரூ.5 கோடி வரை கொள்ளை : திடுக்கிட வைக்கும் கொள்ளையர்களின் வாக்குமூலம்!

லெபனானை விட்டு வெளியேறுமாறு இந்தியர்களுக்கு மீண்டும் வலியுறுத்தல்!

பாராசிட்டமால் உட்பட 53 மருந்துகள் தரமானவை அல்ல!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *