மோடியை சந்திக்கும் ஸ்டாலின்
டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 27) பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். அப்போது தமிழகத்துக்கு சமக்ரசிக்ஷா கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிப்பது, மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத் திட்டப் பணிகளுக்கான நிதியை உடனே வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவுள்ளார்.
கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்
பலரும் எதிர்பார்த்து காத்திருந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் இன்று (செப்டம்பர் 27) 12:00 முதல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் இந்த போர்ட்டல் ஓபன் செய்யப்பட்டுள்ளது.
எங்கெங்கு மழை?
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு!
டெல்லி சட்டப்பேரவையில் முதல்வர் அதிஷி தலைமையிலான ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று எதிர்கொள்கிறது.
நாகேஷ் பிறந்தநாள்!
நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்தநாள் இன்று (27.9.2024). 1933ம் ஆண்டு பிறந்த நாகேஷுக்கு இது 91ஆவது பிறந்தநாள்.
தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள்!
நடிகர்கள் கார்த்திக், அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. தில்ராஜா, தேவரா உள்ளிட்ட படங்களும் வெளியாகின்றன. கொட்டுக்காளி – அமேசான் பிரைம், டிமான்டி காலனி 2 – ஜி5, காபி -ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்
இந்தியா- வங்கதேசம் மோதும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று தொடங்குகிறது.
செஞ்சி வரும் யுனஸ்கோ குழு!
செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள யுனஸ்கோ குழுவினர் இன்று வருகைத் தரவுள்ளனர். இந்த குழுவில் இந்திய தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் இடம்பெற்றுள்ளனா்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 194-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!
டெல்லியில் இன்று பிற்பகல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கூடுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட தமிழக அதிகாரிகள் வலியுறுத்தவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கொண்டைக்கடலை சாதம்!
எஸ்.பி.பி பெயரில் சாலை : ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இளையராஜா
வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!
கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: அமேசானின் புதிய முயற்சி!