சிகாகோ செல்லும் ஸ்டாலின்!
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழர்கள் உடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில் இன்று (செப்டம்பர் 2) சிகாகோ செல்கிறார். அங்கு முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.
வந்தே பாரத் சேவை!
தமிழகத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட 2 வந்தே பாரத் ரயில்களின் சேவை இன்று பயன்பாட்டுக்கு வந்தது. எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.
சித்தராமையா மனு விசாரணை!
மூடா (மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்) விவகாரத்தில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மனு மீது அம்மாநில உயர் நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது
திருச்செந்தூர் ஆவணி திருவிழா!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியன் சுவாமி கோயிலில் இன்று ஆவணி திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பார்முலா 4 கார் பந்தயம்!
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நேற்று இரவு நடந்து முடிந்தது. இதில் ஆஸ்திரேலியா வீரர் ஹக் பார்டர் முதலிடம் பிடித்தார். இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயம் சிறப்பாக நடைபெற்று முடிந்திருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக ரயில்கள் ரத்து!
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களிலும் ரயில் பாதைகள் நீரில் மூழ்கின. இதனால், நேற்று 20 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் 20 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மழை நிலவரம்!
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்கூறியுள்ளது.
திருப்பதியில் புதிய நடைமுறை!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி கும்பிட்ட பின் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு, தலா 50 ரூபாய் விலையில் அன்லிமிடெட் லட்டுகள் வழங்கப்படும் என்று கோயில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 169வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகியது.
உலக தேங்காய்கள் தினம்!
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ஆம் தேதி உலக தேங்காய்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தேங்காய்களின் வளர்ச்சி, உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதியை ஆதரிப்பதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: தாமரை விதை கீர்!
பியூட்டி டிப்ஸ்: எவ்வளவு சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாகவே இருப்பது இதனால்தான்!
‘ப்ளூலாக்: எபிசோடு நாகி’ – விமர்சனம்!
தினுசு தினுசா பிரச்சனை வருதே – அப்டேட் குமாரு