விஜய் கட்சி மாநாடு!
நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. முதல் முறையாக பொதுமக்கள் மத்தியில் விஜய் உரையாற்றப்போகிறார் என்பதால் தவெக மாநாடு மற்றும் அவரது பேச்சு பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள் இயங்கும்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள 24,610 முழுநேர ரேஷன் கடைகள் மற்றும் 10,164 பகுதி நேர ரேஷன் கடைகள் என மொத்தம் 34,744 ரேஷன் கடைகள் இயங்கும் எனவும், ரேஷன் கார்டுதாரர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி பயன்பெறலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது..
ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி சென்னை கடற்கரை யார்டில் நடைபெற உள்ளதால், இன்று காலை 04.00 மணி முதல் மாலை 05.00 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/ செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வானிலை நிலவரம்!
இன்று முதல் 31ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தவெக மாநாடு – போக்குவரத்து மாற்றம்!
விக்கிரவாண்டியில் இன்று நடைபெறும் விஜய் கட்சி மாநாட்டுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என்பதால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து திருச்சி நோக்கி செல்லும் பேருந்துகள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன.
கனரக வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கார்களை பொறுத்தவரை திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து சென்னை வரும், கார்கள் செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை வரும் வகையிலும், கனரக வாகனங்கள் வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை வரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனதின் குரல் நிகழ்ச்சி!
மனதின் குரல் நிகழ்ச்சியின் 113-வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.
தேர்தல் களத்தில் தோனி
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் விளம்பர தூதராக தோனி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வாக்காளர்களை வாக்களிக்க ஆர்வப்படுத்தும் விளம்பர படங்களில் தோனியின் புகைப்படங்கள் இடம்பெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரான் எச்சரிக்கை!
ஈரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து 100 போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் நேற்று குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்திய நிலையில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
டாஸ்மாக் விடுமுறை!
மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை மற்றும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அக்டோபர் 27, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து மதுரை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 224வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75க்கும் டீசல் ரூ. 92.34க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இன்னும் மாநாடே தொடங்கல, அதுக்குள்ள இப்படியா? – அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: கூட்டணித் தலைவர்களோடு 40 நிமிடங்கள்… ஸ்டாலின் வீட்டில் நடந்தது என்ன?
ஓடிபி ஸ்கேன்… இனி வங்கி குறுஞ்செய்தி வர தாமதாமாகும்: டிராய் எடுத்த நடவடிக்கை!
தவெக மாநாடு: குடிநீர், மெடிக்கல் கேம்ப், செல் டவர்… முழு விவரம் இதோ!