டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

தீபாவளி பேருந்துகள்!

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் இன்று (நவம்பர் 9) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனை!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து சென்னையில் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

லாரிகள் ஸ்டிரைக்!

வரி உயரவை கண்டித்து லாரி உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

உலக கோப்பை போட்டி!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இன்று பெங்களூருவில் நடக்கும் போட்டியில் இலங்கையுடன் நியூசிலாந்து அணி மோதுகிறது.

மழை அப்டேட்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக நவம்பர் 9ஆம் தேதியான இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சனாதன வழக்கு விசாரணை!

சனாதனத்துக்கு எதிராக பேசியதாக, ஆ.ராசா எம்.பி, அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஆகியோருக்கு எதிரான வழக்கில் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்றும் விசாரணை தொடர்கிறது.

ஆம்னி பேருந்துகள்!

தீபாவளியை பண்டிகையையொட்டி இன்று முதல் 3 நாட்கள் ஆம்னி பஸ்கள் வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது.

மதுரையில் முத்தமிழ்த் தேர்!

முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, மாவட்டம் தோறும் பயணிக்கும் முத்தமிழ்த் தேர், இன்று மதுரையில் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்திவைக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 536வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச கருத்தரங்கு

காரைக்காலில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், சிறுதானிய உற்பத்தி, நுகர்வு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு சாவல்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கு இன்று தொடங்குகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வீர தீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

கிச்சன் கீர்த்தனா : மேகி பக்கோடா!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts