டாப் 10 நியூஸ்: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் முதல் கிராம சபை கூட்டம் வரை!

Published On:

| By Selvam

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்!

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (நவம்பர் 23) காலை 8 மணிக்கு வெளியாகிறது. இரண்டு மாநிலங்களிலும் யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

கிராம சபை கூட்டம்!

நவம்பர் 1-ஆம் தேதி நடைபெற‌ இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், தமிழகம் முழுவதும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடைபெறுகிறது.

கலைஞர் 100 வினாடி வினா இறுதிப்போட்டி!

கலைஞர் 100 வினாடி வினா இறுதிப்போட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கி கெளரவிக்கிறார்.

விவசாயிகளுக்கு விருந்து!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு தவெக தலைவர் விஜய் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருந்தளிக்கிறார்.

வாக்காளர் சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றுவதற்கு ஏதுவாக இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

சொர்க்கவாசல் டிரைலர் ரிலீஸ்!

சித்தார்த் விஷ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

சையத் முஷ்டாக் அலி கோப்பை!

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பையின் 17-ஆவது சீசன் இன்று தொடங்குகிறது.

மகளிர் சுய உதவிக்குழு இயற்கை சந்தை!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் இயற்கை சந்தை சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 0.22 பைசா உயர்ந்து ரூ.92.61-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கீரை கட்லெட்

ஒரு நாள் கூட லீவு இல்ல… அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel