டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழகத்தில் தொழிற்சாலைகள் துவங்க ஜப்பான் மிட்சுபிஷி நிறுவனம் முதல்வர்‌ ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 9) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது.

திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

திமுக இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று மூன்றாவது நாளாக தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

எடப்பாடி திருப்பதி தரிசனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

ஆசிரியர்கள் போராட்டம்!

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு பிறகு வேலைவாய்ப்பை பெற மற்றொரு தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டல்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கான மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

முந்திரிக்காடு வெற்றி விழா!

களஞ்சியம் இயக்கத்தில் வெளியான முந்திரிக்காடு திரைப்படத்தின் வெற்றி விழா நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 87 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 1,035 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வானிலை நிலவரம்!

வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மும்பை, பெங்களூரு மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 353-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிச்சன் கீர்த்தனா: பன்னா

தோனியைப் போன்ற பலநூறு வீரர்களை உருவாக்குவதே நோக்கம்: முதல்வர்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *