டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

தமிழகம் முழுவதும் இன்று (மே 7) திமுக இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் கண்டோன்மெண்ட் பகுதியில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

நீட் தேர்வு!

இந்தியா முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு இன்று நடைபெறுகிறது.

பூமதியே ஆல்பம் பாடல்!

துருவ் விக்ரம் நடித்து இயக்கியுள்ள பூமதியே ஆல்பம் பாடல் இன்று வெளியாகிறது.

ராஜாங்க திருக்கோலத்தில் கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு ராமராயர் மண்டபத்தில் கள்ளழகர் இன்று ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம்!

சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக தமிழகத்தில் இன்று முதல் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகாது என்று மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளன.

குஷி திரைப்படம் புரோமோ!

சிவ நிர்வணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் குஷி திரைப்படத்தின் புரோமோ இன்று வெளியாகிறது.

வானிலை நிலவரம்!

தெற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 1426 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 351-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குஜராத், லக்னோ மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

மூன்றாம் ஆண்டில் முதல்வர் ஸ்டாலின்: திமுக ஆட்சியில் செய்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share