டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பொறியியல் படிப்பு விண்ணப்பம்!

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., முதலாமாண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இன்று (மே 5) முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

தஞ்சை தியாகிகள் ஆவணப்படம்!

தஞ்சை தியாகிகள் என்ற ஆவணப்படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிடுகிறார்.

வணிகர் சங்க மாநாடு!

வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு இன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.

சந்திரகிரகணம்!

இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இன்று இரவு 8.44 மணிக்கு துவங்கி அதிகாலை 01.01-க்கு நிறைவடைகிறது.

மதுரை சித்திரை திருவிழா!

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் இன்று வைகை ஆற்றில் இறங்குகிறார்.

கேரளா ஸ்டோரி ரிலீஸ்!

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 349-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 174 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 1870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வானிலை நிலவரம்!

தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் மே 7-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ராஜஸ்தான், குஜராத் மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

அதிமுக அலுவலக பொருட்கள், ஆவணங்கள்: ஒப்படைக்க உத்தரவு!

கிச்சன் கீர்த்தனா: பலாக்கொட்டை மசாலா ரோஸ்ட்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts